இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு தேதி மாற்றம்.. தேர்வு வாரியம் அறிவிப்பு

 

தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றுவதற்கு ஆயிரத்து 768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்ரவரி 9-ம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தேர்வர்கள் பிப்ரவரி 14-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தனர். இதற்கான தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.