இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகிற 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தின் அன்று, ராஜராஜ சோழனுக்கு சதய விழா என்ற பெயரில், இரண்டு நாட்கள் சிறப்பாக விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா நேற்று (அக். 24) தொடங்கியது. சதய நட்சத்திர இன்று (அக். 25) ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில், ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழாவை முன்னிட்டு இன்று (அக். 25) தஞ்சாவூர் மாட்டவத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.