வரும் 26-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 

சுசீந்திரம் தாணுமாலைய சாமி கோவில் மார்கழி தேர்திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாதம் நடக்கும் தேர்த்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த விழாவிற்கு கன்னியாகுமரி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் செல்வார்கள்.

இந்நிலையில் தான் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் தேர்த்திருவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த்திருவிழாவினை முன்னிட்டு 26.12.2023 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

26.12.2023 அன்று அறிவிக்கப்பட்டு உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024-ம் ஆண்டு ஜனவரி திங்கள் மூன்றாவது சனிக்கிழமை (20.01.2024) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோயில் மார்கழி திருவிழாவின் முக்கிய நாளான தேர்த்திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881) -ன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 26.12.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும், என்று உத்தரவிடப்பட்டுள்ளது.