சிதறிய உடல்கள்... கண்டெய்னர் மீது மோதிய வேகத்தில் அப்பளமாய் நொறுங்கிய கார்! 5 பெண்கள் பலியான சோகம்!

 

திருச்செங்கொடு அருகே கோவிலுக்குச் சென்று திரும்பிய பெண்கள் 5 பேர் கார் விபத்தில் பலியாகி இருப்பது அப்பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூரில் புகழ்பெற்ற பொன்னர் - சங்கர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிபெறு திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான வேடுபறி வைபவம் நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவில் நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோர் பாளையத்தை சேர்ந்த 5 பெண்கள், ஒரு குழந்தை உள்ளிட்ட ஏழு பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு குழந்தையுடன் மீண்டும் திருச்செங்கோடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். ரவி என்பவர் காரை ஓட்டினார். அவரது மனைவி கவிதா, கந்தாயி, குஞ்சம்மாள், சாந்தி, சுதா ஆகிய பெண்கள், நான்கு வயது குழந்தை லக்‌ஷனா உள்ளிட்டவர்கள் காரில் இருந்தனர்.
பரமத்திவேலூர் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்றுகொண்டு இருந்த கண்டெய்னர் லாரியை கவனிக்காததால் அதன் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி முற்றிலுமாக சிதலமடைந்தது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டு படுகாயம் அடைந்தனர். 
திருச்செங்கோடு போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து காரின் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் ஐந்து பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் இருந்த 4 வயது குழந்தை மற்றும் ஓட்டுநர் பள்ளியில் ரவி ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.