தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!

 

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் (பிப். 26) மற்றும் நாளையும் (பிப். 27) தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் தமிழ்நாடு உள் மாவட்டங்கள், ஏனைய வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பிப்ரவரி 28-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.