முக்கிய பிரபலம் காலமானார்.. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

 

காமராஜர் காலத்தில் அமைச்சராக இருந்த கக்கன் உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேர்மை, எளிமையின் இலக்கணமாக திகழ்ந்தவர் கக்கன். இவர் இந்திய சுதந்திர போராட்ட வீரர். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கக்கன், காமராஜர் அமைச்சரவையில் பொதுப் பணித் துறை, மின்சாரத் துறை, தாழ்த்தப்பட்டோர் நலத் துறை ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்தார்.

அமைச்சர் பதவியில் இருந்த கக்கன் அதிகபட்சமாக நேர்மையை கடைப்பிடித்தவர். சிபாரிசு, பரிந்துரை போன்ற வார்த்தைகளை அறவே வெறுத்தார். 1971 இல் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட கக்கனுக்கு வெற்றி கிட்டவில்லை. இதனால் அவர் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

கக்கன் அமைச்சர் பதவி வகித்தாலும் மிகவும் எளிமையான வாழ்க்கைக்குச் சொந்தக்காரராக விளங்கிய இவரது மூன்றாவது மகன் சத்தியநாதன். 61 வயதாகும் சத்தியநாதன் அரசு மருத்துவராகப் பணியாற்றி, சமீபத்தில்தான் ஓய்வு பெற்றார்.

சென்னை, லாயிட்ஸ் காலனியில் வசித்து வந்த மருத்துவர் சத்தியநாதன் நேற்று மாலை தனது வீட்டில் எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.