பொங்கல் கரும்பு அறுவடை! விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு தகவல்!!

 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் தொகுப்புடன் கரும்பும் கொடுக்கப்படுகிறது. இதற்கான கரும்பு கொள்முதல், அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது

எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கரும்பு கொள்முதல் செய்யப்படக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
விவசாயிகள் https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணையதள முகவரி வாயிலாகவோ அல்லது மாவட்ட  இணைப்பதிவாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு கரும்பு கொள்முதல் படிவத்தில் உரிய பதிவுகளை மேற்கொண்டு தங்கள் விளைவித்த கரும்பினை விற்பனை செய்து பயனடையுமாறு அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இடைத்தரகர்களோ, வியாபாரிகளோ விவசாயிகளை அணுகினாலோ, தவறான தகவல்களைப் பரப்பினாலோ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது