தொட்டிப்பாலத்தில் இருந்து குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை.. தோழி விலகி சென்றதால் விபரீத முடிவு

 

பேச்சிப்பாறை அருகே தோழி பிரிந்து சென்றதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே உள்ள குற்றியாறு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர், அரசு ரப்பர் தோட்ட கழகத்தில் பால் வெட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தவமணி. இந்த தம்ப்பதிக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் இளைய மகள் அபிநயா பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்த நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி நேற்று அபிநயாவும், ஒரு இளம்பெண்ணும் மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கு சென்றனர். தொட்டிப்பாலத்தில் இருவரும் பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். இளம்பெண் முன்னே செல்ல அபிநயா செல்போனில் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டே சென்றார். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் விரைந்து சென்று அபிநயா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதாவது அபிநயாவும், 17 வயதுடைய ஒரு சிறுமியும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். அந்த பெண்ணின் பெயரைத்தான் அபிநயா தனது கையில் பச்சை குத்தி உள்ளார். 

இந்தநிலையில் அந்த பெண் ஒரு வாலிபரை காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்பு அவர் அபிநயாவை விட்டு விலக தொடங்கினார். இது அபிநயாவுக்கு பிடிக்கவில்லை. அவருடன் செல்போனில் வாக்குவாதம் செய்த நிலையில் தொட்டிப்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. 

மேலும் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.