பப்ஜி விளையாடியதை கண்டித்த தாய்.. கோபத்தில் மாணவர் தற்கொலை.. சென்னையில் அதிர்ச்சி!

 

சென்னையில் பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவரை தாய் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மொபைல் விளையாட்டுகளில் இளைஞர்கள் சிலர் மூழ்கி கிடக்கும் நிலையில் சில அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அதுவும் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வெளிநாட்டு வெர்ஷன்கள் மூலம் பதிவிறக்கி விளையாடும் சூழல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். பி.காம் முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், தினமும் நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். நேற்று மாலை நீண்ட நேரம் பப்ஜி கேம் விளையாடி உள்ளார்.

தொடர்ந்து முழுநேரமாக கேம் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டியதால் அவரது தாயார் அவரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பப்ஜி கேம் விளையாடிய கல்லூரி மாணவரை தாய் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.