திருவண்ணாமலைக்கு  கூடுதல் பேருந்துகள்! அமைச்சர் தகவல்

 

இன்று, வெள்ளிக்கிழமை திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு தீப தரிசனம் காண வந்த வண்ணம் உள்ளார்கள்.

பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு பேருந்து கழகங்கள் சார்பில் 1000 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சிவசங்கர் கூறியுள்ளார். திருவண்ணாமலைக்கும் அங்கிருந்து திரும்பிச் செல்வதற்கும் இரு மார்க்கத்திலும் இந்தப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.