முக்கிய அரசியல் கட்சி தலைவர் படுகொலை.. தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதபடி மருத்துவமனைக்கு வந்த பா.ரஞ்சித்!
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ராங் படுகொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து இயக்குநர் பா.ரஞ்சித் கதறி அழுதபடி மருத்துவமனைக்கு வந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூர் அருகே செம்பியன் பகுதியில் வசித்து வந்தார். நேற்று இரவு 7.30 மணியளவில் வீட்டின் முன் நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
ஆம்ஸ்ட்ராங்கோடு இருந்த மேலும் இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ஆம்ஸ்ட்ராங் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த நிலையில், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். மேலும் வெட்டப்பட்ட இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசாரை கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், முக்கியமான தலித் தலைவருமான ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து இயக்குநர் பா.ரஞ்சித் கதறி அழுதபடி மருத்துவமனைக்கு ஓடி வந்தார். இயக்குநர் பா.ரஞ்சித், தலையில் அடித்தபடி கதறி அழுதார்.