கரூர் பெருந்துயரம்.. தமிழ்நாடு அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்ட ரெண்டே ரெண்டு கேள்விகள்!! 

 

கரூர் துயரச் சம்பவத்தை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலானய்வுக் குழுவை அமைத்துள்ளது. உடனடியாக களத்தில் இறங்கிய அஸ்ரா கார்க் பல்வேறு கட்ட விசாரணை களை மேற்கொண்டு வருகிறார். 

ஜனநாயகன் படப்பிடிப்பும் கரூர் சம்பவத்தில் நடைபெற்றுள்ளது என்று கூறப்படும் நிலையில் அங்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன் காமிராக்களை சிறப்பு புலனாய்வுக் குழு கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்திற்கான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது என்று நிருபிக்கப் பட்டால் விஜய் க்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பது உறுதியாகும்.

இந்நிலையில் பாஜகவைச் சார்ந்த உமா ஆனந்தன், ஜி.எஸ்.மணி சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். தவெக தரப்பில் ஆதவ் அர்ஜுனாவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு மனுவிலும் வேறு வேறு கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அனைவருமே தமிழ்நாடு போலீசார் விசாரணை வேண்டாம் என்ற ரீதியில் மனு தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது.

உயர்நீதிமன்ற நடைமுறைகள் சார்ந்த பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு உயர்நீதிமன்றம் தரப்பில் பதில் சொல்லப்படும் என்றும் தெரிகிறது.

அதே வேளையில் தமிழ்நாடு அரசு மீது இரண்டு முக்கிய கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது. அதிமுக கூட்டத்திற்கு ஒதுக்காத இடத்தை விஜய் கூட்டத்திற்கு ஒதுக்கியது ஏன் என்ற கேள்விக்கு தமிழ்நாடு அரசு தரப்பில், வேலுச்சாமிபுரம் இடத்தை மாவட்ட அளவிலான கூட்டங்களுக்கு அனுமதிப்பது இல்லை. அதிமுக மாநிலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பங்கேற்ற கூட்டத்திற்கு அதே இடத்தில் சில நாட்கள் முன்னதாகத் தான் அனுமதி வழங்கப்பட்டது என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் மாநில அரசு பாரபட்சமாக நடந்து கொண்டது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெளிவாகியுள்ளது.

அடுத்ததாக, இரவு நேரத்தில் உடற்கூறு செய்து உடனடியாக உடல்களை ஒப்படைக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டது என்ற குற்றச்சாட்டிற்கு, மாவட்ட ஆட்சியிர் அனுமதியுடன் சிறப்பு நேர்வு நடக்கும் பட்சத்தில் இத்தகைய உடற்கூறு செய்யப்படுவது விதிகளுக்கு உட்பட்டது. பக்கத்து மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக இங்கே வரவழைக்கப் பட்டனர் என்று பதிலில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மீது வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சரியான பதிலளிக்கப்பட்டுள்ளதால், சி.பி.ஐ க்கு வழக்கு மாற்றப்பட வாய்ப்பில்லை என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது.