உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பில் கபில் சிபல்? புஸ்ஸி ஆனந்துக்கு ஜாமீன் கிடைக்குமா?

 

கரூர் துயரச் சம்பவத்தில் எந்தப் பொறுப்பும் ஏற்காமல் கைதுக்கு பயந்து புஸ்ஸி ஆனந்தும் சி.டி.ஆர் நிர்மல்குமாரும் தலைமறைவாகி உள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தை இருவரும் நாடியுள்ளனர். இவர்கள் மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராக உள்ளார் என்றும் அரசு தரப்பில் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று ஆணித்தரமாக வலியுறுத்த உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இன்றைய விசாரணையில் முன் ஜாமீன் கிடைக்காவிட்டால், போலீசாரிடம் சரண்டர் ஆவதைத் தவிர புஸ்ஸி ஆனந்துகும், சி.டி.ஆர்.நிர்மல்குமாருக்கும் வேறு வழி இல்லை. இருவரும் தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்ந்தால், தனிப்படை அமைத்து கைது செய்ய தமிழ்நாடு அரசு முன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.