ஊடகவியலாளர் ஃபெலிஸ் ஜெரால்டு கைது? கரூர் சம்பவம் எதிரொலியா?
கரூர் துயரச் சம்பவம் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அவதூறு பரப்புகிறவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. பாஜக, தவெக வினர் என 3 பேர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையைத் தொடர்ந்து பல்வேறு சமூகத் தள ஐடிக்களில் பதிவுகள் நீக்கப்பட்டு பக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஊடகவியலாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்தாக தகவலும் வீடியோவும் வெளியாகியுள்ளது, கரூர் சம்பவத்தில் தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டி வீடியோ பதிவிட்டு இருந்தார் ஃபெலிக்ஸ் ஜெரால்டு. அதையொட்டியே இந்த கைது நடவடிக்கை என்று கருதப்படுகிறது. ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவருடைய வீட்டில் அதிகாலையில் கைது செய்யப்பட்டார் என்று சவுக்கு சங்கரும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.