தமிழ்நாடு அரசு துறையில் எக்ஸாமின்றி வேலை.. ரூ. 1.50 லட்சம் வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!

 

தமிழ்நாடு வன அனுபவக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு வன அனுபவக் கழகத்தில் முதன்மை இயக்கு அலுவலர், நிதி அதிகாரி, நிர்வாக அதிகாரி பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

பணியின் பெயர்: முதன்மை இயக்கு அலுவலர் (COO), நிறுவனத்தின் செயலாளர், நிதி அதிகாரி, நிர்வாக அதிகாரி, அசோசியேட் (தொழில்நுட்பம்), அசோசியேட் (நிதி)

காலிபணியிடங்கள்: 6 (முதன்மை இயக்கு அலுவலர் (COO) - 1, நிறுவனத்தின் செயலாளர் - 1, நிதி அதிகாரி - 1, நிர்வாக அதிகாரி - 1, அசோசியேட் (தொழில்நுட்பம்) - 1, அசோசியேட் (நிதி) - 1)

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, BBA, CA/CMA, Diploma, M.Sc, MBA, PG Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம்:

முதன்மை இயக்கு அலுவலர் (COO) - ரூ. 1,50,000
நிறுவனத்தின் செயலாளர் - ரூ. 75,000
நிதி அதிகாரி - ரூ. 75,000
நிர்வாக அதிகாரி - ரூ. 50,000
அசோசியேட் (தொழில்நுட்பம்), அசோசியேட் (நிதி) - ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.12.2023ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.12.2023