மைக்கில் ரிதம் பிடிக்க நேரமாகி விட்டதாம்... என்னங்க விஜய் இப்படி உளரலாமா?

 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்ற நாமக்கல் பிரசாரப் பயணத்தில் அவருடைய பேச்சு மீம்ஸ் ஆகி வருகிறது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் உள்ளூர் தொடர்பான வரலாறு, தகவல்கள், தற்போதைய பிரச்சனைகள் என பட்டியல் போட்டு விஜய் யின் உரையை தயாரித்துக் கொடுக்கிறார்கள்.

நடிகராக பல்வேறு வசனங்களை அச்சுப்பிறழாமல் பேசிய விஜய்க்கு , மேடைப் பேச்சில் அதுவும் ஒரே டேக்கில் நீண்ட வசனம் பேசுவது கொஞ்சம் இல்லை, நிறையவே சிரமமாக இருப்பது தெரிகிறது.

நாமக்கல் கூட்டத்தில் விஜய் தடுமாறியவைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

சென்னை மாகாணம் என்பதை சென்னை ”மகாணம்”

உணர்ச்சியூட்ற மண்ணும் என்பதற்குப் பதிலாக ”மட்டும்”

பிற்படுத்தப்பட்ட என்பதற்கு “பிற்படுத்தப்பப்ட்ட”

அமைக்கணும் என்பதற்கு “அமைக்கிக்கணும்”

நிலையங்கள் என்பதற்கு “திலையங்கள்”

பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு “பாடிதிக்கப்பட்டுள்ளனர்”

அறிக்கையில் சொல்வோம் என்பதற்கு “செல்வோம்”

ஒத்தையடி பாதை போடப்படும் என்பதில் “போதப்படும்”

என்று பேசிய விஜய் மருத்துவ வசதி என்பதை திக்குவாய் போல் ம.. ம... மருத்துவ வசதி என்றும் திணறிப் பேசியுள்ளார்.

ஒரு மனுசனுக்கு நாக்கு குளறலாம் ஆனால் இத்தனை சொற்களில் குளறுபடி என்றால் ஏதோ பிரச்சனை இருக்கனும் தானே?

இந்த குளறல்கள் எல்லாம் விஜய்க்கும் தெரிந்து விட்டது. அதை சமாளிப்பதற்கு இறுதியாக அவர் சொன்னது தான் மிகப்பெரிய காமெடியாக மாறியுள்ளது.

“ சாரி நான் பேசுவதும் அங்கு ஒலிக்கும் சத்தமும் முன் பின் வித்தியாசமாக இருந்தது. மைக் காரணமாக கொஞ்சம் பேச்சு இங்கும் அங்கும் முன்பின் மாறி விட்டது. அதனால் ரிதமை பிடிக்க சற்று நேரமாகிவிட்டது, நன்றி” என்று உண்மையாகவே உளரிக் கொட்டியுள்ளார் விஜய்.

இவ்வளவு கூட்டம் கூடுகிறது. சாதாரணமாக இயல்பாகப் பேசிவிட்டுச் செல்லலாம். ஆனால் என்னென்னமோ பேச நினைத்து இப்படி உளரிக் கொட்டும் பின்னணியில் விஜய்க்கு ஏதோ ஒரு வகையில் நெருக்கடி இருப்பதாகத் தெரிகிறது.