அண்ணா தொடங்கிய கட்சியை ஒழிக்க அண்ணாவையே துணைக்கு அழைக்கிறாரா? சீமான் சரமாரி கேள்வி!!

 

அண்ணா தொடங்கிய கட்சியை எதிரி என்று கூறிவிட்டு அண்ணாவையே அதற்கு துணைக்கு அழைக்கிறார் நடிகர் விஜய் என்று கூறியுள்ளார் சீமான். செய்தியாளர்கள் மதுரை தவெக மாநாடு குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் சீமான்.

தவெக கட்சியின் முதல் மாநாட்டில் இருந்த தலைவர்கள் இரண்டாம் மாநாட்டில் இல்லை. பேரறிஞர் அண்ணாவும் பெருந்தகை எம்.ஜி.ஆரும் முதல் மாநாட்டிலேயே இடம் பெற்றிருந்தால் வரவேற்றிருக்கலாம். முதல் மாநாட்டில் இடம் பெற்ற தலைவர்களை ஓரங்கட்டி விட்டு இப்போது அண்ணாவையும் எம்ஜிஆரையும் கொண்டு வந்தால் என்ன அர்த்தம்.

அண்ணா தொடங்கிய கட்சி தான் திமுக. அதை ஒழிப்பேன் என்று அண்ணாவையே துணைக்கு அழைக்கிறாரா? இது மிகவும் சிரிப்பாக உள்ளது. எம்ஜி.ஆர் தொடங்கிய கட்சியை எதிர்த்து விட்டு அவருடைய போட்டோ மட்டும் எப்படி வைக்கிறார்? விஜயகாந்த் பற்றி இப்போது பேசும் விஜய். விஜய்காந்த் கட்சி நடத்திய போது என்ன செய்தார். நான் விஜயகாந்துக்காக ரிஷிவந்தியம் தொகுதியில் பரப்புரை செய்தேன். விஜய் என்ன செய்தார் விஜயகாந்துக்கு. அவரை தற்போது தன்னுடைய வழிகாட்டி என்றால் என்ன அர்த்தம் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் சீமான்.

விஜயகாந்த் பற்றி சீமானின் கேள்வியை தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.