ராமேஸ்வரத்தில் திடீரென 200 மீட்டர் உள்வாங்கிய கடல்... மக்கள் அச்சம்.!

 

ராமேஸ்வரத்தில் 200 மீட்டர் உள்வாங்கிய கடலால் மீனவர்கள் அச்சமடைந்து உள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியை சுற்றி 21 தீவுகள் உள்ளன. அது போல் இந்த 21 தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், ஆமை, பவளப்பாறைகள் மற்றும் பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதை தவிர இயற்கையாகவே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பல வகையான மீன்கள் அதிகமாக உள்ளது.

<a href=https://youtube.com/embed/4FExYvTx7yk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/4FExYvTx7yk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்த நிலையில் ராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா என்ற பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு படகுகளில் மீனவர்கள் மீன் தொழில் செய்து வருகின்றனர். இன்று அதிகாலையில் வழக்கத்திற்கு மாறாக ஓலைக்குடா கடல் பகுதியில் சுமார் 200 மீட்டர் வரை கடல்நீர் உள்வாங்கி கானப்பட்டது. 

கடல்நீர் உள்வாங்கியுள்ளதால், கடலுக்கு அடியில் உள்ள பாசிகள், புற்கள், பாறைகள் உள்ளிட்டவை வெளியே தெரிகின்றன. ஓலைகுடா பகுதியில் உள்வாங்கிய கடல் சில மணி நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக் கூறப்படுகிறது.

இதேபோன்று கடந்த 3 தினங்களாக குந்துகால் கடற்கரை பலவகையான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தன. இதனால் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர் கூறியபோது, காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் உள்வாங்குவது, கடல் மீன்கள் செத்து கரை ஒதுங்குவது வழக்கம் என்று கூறினார்.