தொடரும் கனமழை.. நீலகிரியில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Jun 29, 2024, 09:04 IST
கனமழை காரணமாக நீலகிரியில் உள்ள 2 தாலுக்காவில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அம்மாவட்டத்தின் கூடலுர், பந்தலூர் தாலுகாக்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ளார்.