கவனிச்சீங்களா.. திமுக பொதுக்குழு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.. மிஸ்ஸிங்!!

 

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவரும், திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. பங்கேற்கவில்லை.

கட்சியினர் மத்தியில் சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில், ஒன்றிய அரசின் தூதுவர்குழுத் தலைவராக ரஷ்யா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி விளக்கம் அளிக்கச் சென்றுள்ளதால் தான் கனிமொழி இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிய வந்துள்ளது.

பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க ஒரு நாள் மட்டும் வந்து செல்லட்டுமா என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கனிமொழி கேட்டதாகவும், ஒன்றிய அரசுக் குழுவின் தலைவராக சென்றுள்ளதால், அதைத் தவிர்த்து விட்டு கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றால் பாஜகவின் விமர்சனத்திற்கு உள்ளாக நேரிடும் என்று முதலமைச்சர் வர வேண்டாம் என்று தடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

தேசப்பாதுகாப்பு தொடர்பான பயணம் என்பதால் வீண் விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காகவே கனிமொழி எம்.பி. கலந்துகொள்ளவில்லை என்று உடன்பிறப்புகளுக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.