2 பிள்ளைகளின் தாயுடன் உல்லாசம்.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த அசிங்கம்

 

கடையநல்லூர் அருகே இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த ஆபாச வீடியோக்களை பெண்ணின் உறவினருக்கு அனுப்பிய இன்ஜினியரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அட்டைக்குளம் பகுதியை சேர்ந்தவர் முசாபுதீன் (29). இன்ஜினியரான இவர், சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணுடன் முசாபுதீனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், முசாபுதீனுடன் தொடர்பு நீடித்தது. இதனால் இருவரும் அடிக்கடி சென்னையில் தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அப்பெண்ணுக்கு தெரியாமல் முசாபுதீன், செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் வேலையை விட்டுவிட்டு முசாபுதீன் கடையநல்லூருக்கு வந்து விட்டார். அந்தப் பெண்ணும் காயல்பட்டினம் சென்று விட்டார். இருப்பினும் இருவரும் அவ்வப்போது நெல்லையில் தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம், பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே கண்டித்துள்ளனர். இதனால் அப்பெண், முசாபுதீனை சந்திப்பதை நிறுத்தி விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த முசாபுதீன், இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்த பெண்ணின் உறவினருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். இதனை பார்த்த உறவினர் அதிர்ச்சியடைந்து அப்பெண்ணிடம் விவரத்தை கேட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து முசாபுதீனை கைது செய்தனர்.