ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவி நீட்டிப்பு?

 

ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு ஆளுநராக இருந்து வரும் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 31) முடிவடைகிறது. எனவே, தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா? அல்லது அவருக்கே பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவியது.

இதற்கிடையில் அண்மையில் டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட சில அமைச்சர்களை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து டெல்லியில் நடைபெற உள்ள உளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்க இருப்பதாகவும் இதனால், அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்கலாம் இன்றுடன் நிறைவு பெறுகிற நிலையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ்நாட்டிற்கு புதிய ஆளுநர் தொடர்பான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பதால் அவரே ஆளுநராக தொடர்வார் எனக் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வரும் என தகவல் வெளியாகியுள்ளது.