அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

 

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் பெரிய அளவிலான பங்கீடு சர்வதேச சந்தைக்கு தான் உள்ளது, இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் மக்களின் தேவைக்கு கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறதோ, அதேபோல தான் தங்கமும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இதனால் தங்கம் விலையில் அதிகளவில் மாற்றத்தில் அதிகளவிவான ஆதிக்கம் சர்வதேச முதலீட்டு சந்தை அடிப்படையில் உள்ளது. நேற்று குறைந்து விறுபனையான தங்கம் விலை, இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் காத்திருந்து தங்கம் வாங்க திட்டமிட்டோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 15 ரூபாய் உயர்ந்து, ரூ.5,675-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ரூ.45,400-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,636-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 13 ரூபாய் உயர்ந்து, ரூ.4,649-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 78,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, ரூ.78,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.