மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு 280 ரூபாய் குறைந்தது.. தங்க பிரியர்கள் மகிழ்ச்சி!

 
gold

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், இந்திய மக்களால் அதிகம் விரும்பப்படும் பொருளாக தங்கம் இருக்கிறது. தங்கத்தை வாங்குவதில் பெண்களின் ஆர்வம் என்றைக்கும் குறைந்ததில்லை. ஒரு காலத்தில் தங்கத்தின் விலை சீராக இருந்தது. இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பும், பின்பும் தங்கத்தின் விலையை ஒப்பிட்டு பார்த்தால், தங்கத்தின் விலை மாறிக்கொண்டே இருப்பது தெரியவரும்.

மாறிக்கொண்டே இருக்கும் தங்கத்தின் இன்றைய விலையை தெரிந்து கொள்ள தவறினால், அது பணப்பையை கடிக்கும். எனவே, தங்கத்தை வாங்குவதற்கு முன்பு சந்தையில் தங்கத்தின் இன்றைய விலையை தெரிந்து கொள்வது மிகமிக முக்கியமாகும். ஆபரண விற்பனையாளர்களுக்கு இடையே காணப்படும் விலை வித்தியாசத்தையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒருசில நகரங்களில் தங்கத்தின் விலையை உள்ளூர் தங்க ஆபரண உற்பத்தியாளர் சங்கம் தான் முடிவு செய்கிறது. தங்கத்தின் விலை ஊருக்கு ஊர், கடைக்கு கடை மாறுபடும் வாய்ப்புள்ளது.

Gold-Price

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 35 ரூபாய் குறைந்து, ரூ.6,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ரூ.53,520-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,509-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 29 ரூபாய் குறைந்து, ரூ.5,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 90,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 700 ரூபாய் உயர்ந்து, ரூ.90,700-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.90.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.