மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. தங்க பிரியர்கள் அதிர்ச்சி!

 

தங்கம் மிகப் பெரிய முதலீடாக கருதப்படுகிறது. என்னதான் பெண்களுக்கு புன்னகை இருந்தாலும் பொன் நகை என்பது அவசியமானதாகிவிட்டது. கவரிங் நகைகளே அட்டகாசமாக தங்க நகைகளுக்கு ஈடாக வந்துவிட்ட போதிலும் தங்கத்தின் மீதான மோகம் மட்டும் இன்னும் குறையவில்லை. மண்ணின் மீதும் பொன்னின் மீதும் போட்ட முதலீடு எப்போதும் வீண் போகாது என்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அதனால்தான் பெண்கள் தாய் வீட்டிலோ அல்லது கணவன் வீட்டிலோ இருந்து பூர்வீக சொத்து விற்பனை செய்ததற்கான பணம் வந்தால் உடனே நகை மீதும் மனை மீதும் விற்பனை செய்ய முன்வருகிறார்கள். அது போல் பணம் என ஒன்று கிடைத்தாலே தங்கத்தின் மீது முதலீடு செய்யத்தான் யோசிக்கிறார்கள்.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 35 ரூபாய் உயர்ந்து, ரூ.6,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து, ரூ.51,360-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,230-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 29 ரூபாய் உயர்ந்து, ரூ.5,259-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 89,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 2,000 ரூபாய் உயர்ந்து, ரூ.91,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.91.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.