புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.55,120-க்கு விற்பனை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

 

தங்கத்தை விரும்பும் நாடான இந்தியாவில், தங்கத்தின் மீது தணியாத ஈர்ப்பு இருந்துகொண்டே உள்ளது. இதனால் உலக அளவில் தங்கத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. முதலீட்டு தேர்வாகவும், ஆடம்பர பொருளாகவும் கருதக்கூடிய இரட்டை இயல்பு தங்கத்திற்கு உள்ளது.

கடந்த பல ஆண்டுகளில் தங்கத்தின் மதிப்பு படிப்படியாக உயர்ந்து கொண்டே உள்ளது. எனவே, ஒரு சொத்தாகவும், பாதுகாப்பாகவும் முதலீடு செய்யக்கூடியதாக தங்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கமாக இருந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 55 ரூபாய் உயர்ந்து, ரூ.6,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து, ரூ.55,120-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,599-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 45 ரூபாய் உயர்ந்து, ரூ.5,644-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 90,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமுமின்றி, ரூ.90,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.90.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.