காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை.. சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் புகார்

 

கரூர் அருகே காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் நிவேதிதா (25). இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் படித்தபோது, அதே பல்கலைக்கழகத்தில் படித்த கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பள்ளிப்படை தில்லை அம்மன் நகர் பகுதியை சேர்ந்த கபிலர் மகன் சுபாஷ் சந்திர போஸ் (30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

இவர்கள் இருவரும், கடந்த 2022 ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டு சிதம்பரம் பள்ளிப்படை தில்லை அம்மன் நகர் பகுதியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிவேதிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நிவேதிதாவின் தாய் நேற்று சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் போில் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்குப்பதிவு செய்து, நிவேதிதா தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.