வலது தோளில் எலும்பு முறிவு.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி!
May 26, 2024, 19:12 IST
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மதிமுகவின் இயக்க தலைவர் வைகோ நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த தகவலை வைகோவின் மகனும், மதிமுக கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
துரை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். எதிர்பாராதவிதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.