பொதுத்தேர்வு பயம்.. 10-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

 

ராசிபுரம் அருகே தேர்வு பயத்தில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தன்ராஜ் (48). கடந்த 12 வருடங்களுக்கு முன்பு காலமான நிலையில் இவரது மகன் நவீன்சாமி (16) ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்ற வருகிறார். இவரது தாய் தேன்மொழி ராசிபுரத்தில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் மகன் நவீன் குமார் கடைக்கு சென்று தாயிடம் வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் பணி முடிந்து வீட்டிற்கு வந்த தேன்மொழி மகன் தூக்கில் தொங்கி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுவனை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுவன் நவீன்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மகன் மொபைல் போனில் விளையாட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் பொதுத்தேர்வு வர இருப்பதால் தாய் தேன்மொழி அதற்கு படிக்க சொன்னதாகவும் தெரிகிறது. மேலும், தேர்வு பயத்தின் காரணமாக நவீன் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார்  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.