கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் பலி.. ஈரோடு அருகே பரபரப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் எதிர்பாராத விதமாக இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் இடிபாடுகளில் சிக்கி உள்ள பலரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கல்குவாரியின் உரிமையாளரான ஈஸ்வரி, அவரது கணவர் லோகநாதன், மற்ற தொழிலாளர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வெடிவிபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த வெளியூரைச் சேர்ந்த இருவர் குறித்து பங்களாபுதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.