வாழ்க்கையை தொலைச்சிடாதீங்க.. முதல்லேயே விஜய் இந்த அட்வைஸ் பண்ணியிருக்கலாமே?
கரூர் பெரும் துயரத்திற்குப் பிறகு முடங்கிப் போன தவெக தரப்பு சமூகத் தளங்களில் மீண்டும் தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. ஆனால் தொண்டர்கள் எனப்படும் விஜய் ரசிகர்கள் முரட்டுத்தனமான போக்கை கைவிடுவதாகத் தெரியவில்லை,
இது வரையிலும் திமுக தலைவரை சீண்டி வந்த தவெக வினர், தற்போது நீதிபதியையும் வசைபாடத் தொடங்கியுள்ளனர். இது கட்சித் தலைமைக்கு தொண்டர்களின் மடத்தனமான செயல்களை கொஞ்சம் புரிய வைத்துள்ளது போலத் தெரிகிறது.
உடனடியாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர். “நீதிபதியை யாரும் விமர்சிக்காதீர்கள், எந்த போஸ்ட்லயும் போய் கமெண்ட் எதுவும் பண்ணாதிர்கள்
முதன் முதலாக தன்னுடைய தொண்டர்கள் எனப்படும் ரசிகர்களுக்கு விஜய் யிடமிருந்து “வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்” என்ற எச்சரிக்கை வந்துள்ளது. மரத்து மீது ஏறிய போது, மின் கம்பங்களில் ஏறிய போது, விஜய் வாகனத்தை மடத்தனமாக பைக்கில் துரத்தி வந்த போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு , நீதிபதியை விமர்சனம் செய்யும் போது விழித்துக் கொண்டு அறிவுரை சொல்லியிருப்பது நல்ல செயல் தான்.
இதை கட்சி ஆரம்பித்த உடனேயே சொல்லியிருந்தால், அந்த ரசிகர்கள் பக்குவப்பட்ட தொண்டர்களாக நடந்து கொண்டிருப்பார்களே. விஜய் கூட்டங்களிலும் ஒரு நெறிமுறை இருந்திருக்கும், இந்த அசம்பாவிதங்கள் நடந்திருக்காது. பாஜகவிடம் கையேந்தி நிற்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது.
அடுத்தடுத்து விஜய் எடுக்கப்போகும் முடிவுகள் தான் அவருடைய அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது