சி வோட்டர் கருத்துக் கணிப்பில் விஜய் க்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

 

நாடு முழுவதும் மக்களின் எண்ண ஓட்டத்தைத் தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தப்பட்ட இந்தியா டுடே - சி வோட்டர் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவாக வெளியான இந்த கருத்துக் கணிப்பில் தமிழ்நாட்டில் மட்டும் பின்னடவையே சந்தித்து வருகிறது.

அதிமுக கூட்டணிக்குப் பிறகும், இப்போது தேர்தல் நடந்தால் அதிமுக - பாஜகவுக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் திமுக அணிக்கு 36 தொகுதிகள் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2024 தேர்தலில் தனித்தனியே அதிமுக, பாஜக பெற்ற மொத்த வாக்குகள் 41 சதவீதமாக இருந்தது. இது தற்போது 37 சதவீதமாகக் குறைந்துள்ளது.

திமுக அணிக்கு 47 சதவீதத்திலிருந்து 48 சதவீதமாக ஆதரவு அதிகரித்துள்ளது. விஜய் யின் தவெக திமுக எதிர்ப்பு வாக்குகளைத் தான் பிரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. இது அதிமுக - பாஜகவுக்குத் தான் பின்னடைவாக இருக்கும். விஜய்க்கு ஒரு பாராளுமன்ற தொகுதியில் கூட வெற்றி இல்லை என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

எனக்கும் திமுகவுக்கும் தான் போட்டி என்று விஜய் கூறி வரும் நிலையில் மக்கள் அவரை மூன்றாவது இடத்திற்குத் தான் தள்ளியுள்ளது இந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

இது மதுரை தவெக மாநாட்டிற்கு முந்தைய கருத்துக் கணிப்பு. அடுத்த கணிப்பில் விஜய்க்கு எந்த இடம் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.