வருத்தமாக இருப்பவர்கள் தாடியை ட்ரிம் செய்துட்டு தான் வீடியோ போடுவாங்களா? என்னங்க விஜய் இந்த நாடகம்!!

 

கரூரில் விஜய் பிரச்சாரத்தில் பங்கேற்ற 41 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்மந்தப்பட்ட விஜய், இடத்தை விட்டு ஓடிப்போய் சென்னை பன்னையூர் வீட்டில் பதுங்கிக் கொண்டார். மூன்று நாட்கள் கழித்து யார் யாரிடமோ ஆலோசனை பெற்று பக்காவாக ஸ்கிரிப் செய்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். தன்னுடைய திரைப்படத் துறை அனுபவத்தை ஒரே ஃப்ரேமில் அருமையாக வெளிப்படுத்தியும் உள்ளார்.

இறந்தவர்களுக்காக ஒரு இரங்கல் கூட இல்லை. தங்கள் மீது தவறு இல்லை, அரசு மீதே தவறு என்ற தொனியில் மட்டுமே பேசிவிட்டு முதலமைச்சருக்கு சவால் விடுவது போல் வீடியோவை முடித்துள்ளார் விஜய். மூன்று நாட்களாக அண்ணன் அன்னம் தண்ணி இல்லாமல் வாடி வதங்கிப் போய் உள்ளார் என்று விஜய் ரசிகர்கள் சமூகத்தளத்தில் உருகிக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்று நாட்கள் சோகமாகவே உருகிக் கொண்டிருந்தவரின் வீடியோவை கவனித்தால், தாடியை நன்றாக ட்ரிம் செய்து பளிச்சென்று ஹீரோ மிடுக்குடன் வீடியோவில் தோன்றியுள்ளார் விஜய். கிராமப்புறத்தில் வீட்டில் உறவினர்கள் இறந்து போனால் 16 நாட்கள் முதல், 30, 40 நாட்கள் வரையிலும் முடி வெட்டவோ, முகத்தில் சவரம் செய்யவோ மாட்டார்கள். துக்கத்தை அனுசரிப்பதற்கான அடையாளமாக ஆண்கள் முடி வெட்டுவதோ, சவரம் செய்வதோ கிடையாது.

துயரத்தில் மூன்று நாட்களாக முடங்கிப் போன விஜய்க்கு முகத்தில் தாடியை ட்ரிம் செய்ய மட்டும் நேரம் எப்படிக் கிடைத்தது. அவராகவே ட்ரிம் செய்து கொண்டாரா அல்லது ஸ்பெஷிலிஸ்ட் வரவழைக்கப்பட்டு இந்த முக அலங்காரம் நடைபெற்றதா என்று தெரியவில்லை. ஆனால் இறந்து போன 41 உயிர்களை துச்சமாக மதித்த இரக்கமற்றவர்  விஜய் என்று தான் வீடியோவை பார்த்த கிராமப்புற மக்கள் சொல்கிறார்கள்.