40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி!

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிவாகை சூடியுள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிட்டது. மொத்தம் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகளால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

இந்த நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக 25.78 சதவீத வாக்கு சதவீதத்தையும் அதிமுக 20.43 சதவீதத்தையும் காங்கிரஸ் 10.81 சதவீதத்தையும் பாஜக 10.69 சதவீதத்தையும் பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 10 இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளியுள்ளது குறிப்பிடத்தக்கது.