வெஜ் பஃப்சில் கரப்பான் பூச்சி.. சிவகாசி பேக்கரிக்கு 10 ஆயிரம் அபராதம்!

 

சிவகாசியில் உள்ள ஒரு பேக்கரியில் வாடிக்கையாளர் வாங்கிய பஃப்ஸில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி புறவழிச்சாலையில் ராமானுஜம் என்பவருக்குச் சொந்தமான பேக்கரி செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் வாடிக்கையாளா் ஒருவர் 8 வெஜ் பஃப்ஸ் வாங்கியுள்ளார். அதில் ஒரு பஃப்ஸை சாப்பிட எடுத்த போது அதற்குள் கருகிய நிலையில் கர்ப்பான் பூச்சி இருந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பேக்கரியில் கூறியதையடுத்து, வேறு பஃப்ஸ் வழங்கப்பட்டது. பின்னர், வாடிக்கையாளர் சிவகாசி மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலா் ராஜாமுத்து, பேக்கரியை ஆய்வு செய்தார். பின்னர், பாதுகாப்பற்ற முறையில் உணவு பொருள் தயாரித்ததாக நோட்டீஸ் வழங்கி, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.