10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

 

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். தற்போது காலாண்டுத் தேர்வுகள் முடிந்து, இரண்டாம் பருவம் தொடங்கியுள்ள நிலையில், பொதுத்தேர்வுக்கு திட்டமிட்டு மாணவர்கள் தயாராகும் வகையில், முன்கூட்டியே தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு அட்டவணையை  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

அதன்படி, பிளஸ்-2 செய்முறை தேர்வு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

பிளஸ்-2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.