சாலையில் சென்றவரை முட்டித் தூக்கிய மாடுகள்.. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி.. பரபரப்பு வீடியோ!

 

நெல்லையில் சாலையில் சண்டையிட்ட இரு மாடுகள் இருசக்கர வாகனம் இது மோதியதால் நிலைகுலைந்த நீதிமன்ற ஊழியர் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நெல்லை மாவட்டம் பேட்டை தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதராஜ் (58). இவர் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்  இளநிலை கட்டளை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் இன்று காலை வீட்டில் இருந்து மொபட்டில் புறப்பட்டார். வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, அங்கு 4 வழிச்சாலை பணி நடைபெறுவதால் போக்குவரத்து ஒரு பாதையில் மட்டும் திருப்பி விடப்பட்டிருந்தது. அதில் எதிரெதிரே வாகனங்கள் கடந்து சென்றன.  

அந்த சாலையில் வேலாயுதராஜ் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சண்டையிட்ட இரண்டு மாடுகள் சாலையின்  குறுக்கே ஓடியது. மாடுகள இருசக்கர வாகனத்தில் மோதி அதனால் நிலை குலைந்த வேலாயுதராஜ் சாலையில் நிலைத்திடுமாறு கீழே விழுந்தார் எதிரே நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பேருந்து, வேலாயுதராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.வேலாயுதராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு விபத்தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றொரு சாலை பகுதியையும் திறந்து விட்டு போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர்.