கோயம்பேடு சந்தையில் திடீரென பற்றி எரிந்த பைக்.. பரபரப்பு காட்சிகள்

 

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர், காய்கறி வாங்குவதற்காக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துள்ளார். அவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு காய்கறி மார்க்கெட்டுக்குள் சென்றுள்ளார். 

அப்போது திடீரென அவரது இருசக்கர வாகனம் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனைக் கண்டு அருகில் இருந்த தொழிலாளர்கள் உடனடியாக வாகனத்தின் மீது பற்றி எரிந்த தீயை மணல் மற்றும் தண்ணீரைக் கொண்டு அணைக்க முயன்றனர்.