அண்ணாமலையே “ரூ” தானே எழுதுறாரு!! எக்ஸ் தளத்தில் பரவும் தொகுப்பு!!

 

தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்திய நாணய குறியீட்டை தவிர்த்து “ரூ” என்று எழுதப்பட்டுள்ளதற்கு  நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு தமிழரின் கண்டுபிடிப்பை இழிவு படுத்திவிட்டது தமிழ்நாடு அரசு என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவுகளில் அவர் “ரூ” என்ற எழுத்தைத் தான் பயன்படுத்தி வருகிறார். இந்திய நாணய சின்னத்தை பயன்படுத்தவில்லை என்ற பதிவு வைரலாகி வருகிறது. அண்ணாமலையின் பதிவுகளில் ரூ என்ற எழுத்தைத் தேடி அதில் வரும் பதிவுகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.