அன்புமணிக்கு முதல்வர் பதவி? அதுக்கு தேர்தலில் வெற்றி பெறனும்ல!!

 

டாக்டர்.ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டால், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி அன்புமணிக்கு கிடைக்கும் என்று வராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டால், தமிழக முதல்வர் பதவி அன்புமணிக்கு கிடைக்கும் என்று வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி கூறினார். கூறியுள்ளார்.

மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்துடன் முதலமைச்சர் பதவியை நோக்கி படு ஸ்டைலாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் அன்புமணி ராமதாஸ். ஆனால் தேர்தல் முடிவுகள் படுதோல்வியாகத் தான் அமைந்தது. தற்போது அப்பா - மகன் சண்டையால் பாமக சீனியர் - ஜூனியர் என இரண்டாகப் பிளவுபடக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

ஆனால் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் டாக்டர்.ராமதாஸிடம் ஒரு மென்மையானப் போக்கை காண முடிந்தது. பரபரப்பிற்காக அப்பா - மகன் சண்டை போடுவது ஒரு செட்டப் என்ற பேச்சு அடிபடத் தொடங்கியுள்ளது. பாஜகவின் அழுத்தத்தால் இருவரும் ஒன்றிணைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் டாக்டர்.ராமதாஸின் தீவிர ஆதரவாளரான வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி அரியலூர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருள்மொழி,

“வன்னியர் சங்கமும், பாமகவும் தொய்வின்றி மக்கள் பணியாற்ற ஆயத்தமாகி விட்டன. கட்சி, சங்கத்தை உருவாக்கியவரே ராமதாஸ்தான். அவர்தான் கட்சிக்குத் தலைவர். அவர் உருவாக்கிய இந்த அமைப்பில் எந்த சலசலப்பும் இல்லை. கட்சிக்கு அன்புமணி தலைவர் கிடையாது என்று ராமதாஸ் சொல்லிவிட்டார். பிறகு ஏன் நான்தான் தலைவர் என்று அன்புமணி சொல்லிக் கொள்கிறார்?

ராமதாஸ் பேச்சைக் கேட்டு நட‌ந்தால், அன்புமணிக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அவரை தமிழக முதல்வராக்குவதாக ராமதாஸ் கூறுகிறார். எங்களுடன் சேர்ந்து ராமதாஸை தலைவராக ஏற்றுக்கொண்டால், அன்புமணிக்கு முதல்வர் பதவி கிடைக்கும்.” என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆவதற்கு முதல்ல 117 தொகுதிகளுக்கு மேல் பாமக வெற்றி பெற வேண்டும் என்பதை பு.தா. அருள்மொழி மறந்து விட்டார் போலத் தெரிகிறது.