பூத் கமிட்டி அமைப்பதற்கு தனி விமானத்தில் சென்ற நடிகர் விஜய் - கட்சிப் பணமா? சொந்தப் பணமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு ஒன்றிய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. விஜய் எங்கு சென்றாலும் அவருக்கு பாதுகாப்பாக ஒன்றிய அரசின் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் செல்கிறார்கள். இந்நிலையில் கட்சியின் பூத் கமிட்டியை அமைப்பதற்கா கோயமுத்தூரில் கூட்டம் ஒன்றை நடத்துகிறார் விஜய். அதில் பங்கேற்பதற்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றார். இது குறித்து சமூகத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
”அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன், சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு தினசரி 10 விமானங்கள் உள்ளன. சும்மா சொல்றேன்” என்று கூறி வீடியோ செய்திப் பகிர்வை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து குறிப்பிட்டுள்ளார்.
பிற கட்சிகளை ஊழல் கட்சிகள் என விமர்சிக்கும் நடிகர் விஜய் தன்னுடைய கட்சி செயல்பாடுகளையும் பண விவகாரங்களையும் வெளிப்படையாக தெரிவிப்பாரா?