திடீரென விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய்.. பிரேமலதாவுடன் சந்திப்பு.. என்ன காரணம்?

 

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை நடிகர் விஜய் நேரில் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், சினிமாவில் டாப் இடத்தில் இருக்கும் போதே அரசியலில் நுழைந்து தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கினார். வெறும் அறிவிப்புடன் நிற்காமல் கட்சி தொடர்பாக ஒவ்வொரு நடவடிக்கைகளையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார். அடுத்தகட்டமாக வரும் 22ம் தேதி விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்த உள்ளார். இதற்காகச் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேவையான பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். ஆனால், இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது. விஜய் இப்போது நடித்து வரும் கோட் படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனமான விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுவதுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு அனுமதி அளித்ததற்காக நன்றி கூறவே விஜய் அங்குச் சென்றுள்ளார்.

 

கோட் படத்தில் விஜயகாந்த் ஏஐ மூலம் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுவதுள்ளதை இதுவரை அந்தப் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை. சமீபத்தில் வெங்கட் பிரபு பிரஸ் மீட்டில் கூட இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போதும் அதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. இந்தச் சூழலில் இப்போது நடந்துள்ள இந்தச் சந்திப்பு அதை உறுதி செய்யும் விதமாகவே இருக்கிறது.

இந்தச் சந்திப்பின் போது கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் உடனிருந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் படத்திற்கு விஜய் மற்றும் படக்குழுவினர் மரியாதையும் செலுத்தினார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் தி கோட். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியானது. அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.