ஆராரோ, ஆரிராரோ.. சொர்ணத்தின் மாம்பழமே.. டாக்டர் ராமதாஸ் எழுதிப் பாடிய பாட்டு!!

 

ஆராரோ, ஆரிராரோ.. சொர்ணத்தின் மாம்பழமே... என்ற பாடலை எழுதிப் பாடியுள்ளார் முதுபெரும் தலைவர்  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர்.ராமதாஸ்.

ராமதாஸின் மகள் கவிதாவின் மகனுக்கும், கட்சியின் வடக்கு மண்டல இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தியின் மகளுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு பிறந்த மகனின் முதலாம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. டாக்டர் ராமதாஸ் தனது கொள்ளுப் பேரனை வாழ்த்திப் பாடல் எழுதியுள்ளார். கொள்ளுப் பேரனின் பிறந்த நாள் விழாவில் அவரே அந்தப் பாடலைப் பாடி வாழ்த்து தெரிவித்தார்.

கொள்ளுப்பேரனுக்காக ராமதாஸ் தாலாட்டு பாடல் பாடிய காட்சிகளை பாமகவினர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்