ஆயிரம் மருந்தகங்கள்! முதலமைச்சர் திறந்து வைத்தார்!!

 

தமிழ்நாட்டில் குறைந்த விலையில் ஆங்கில, யுனானி, சித்த மருந்துகளை வாங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை திறந்துள்ளது. இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைத்தார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

”எல்லோருக்கும் உயர்தர மருத்துவம் என்ற இலக்கில், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, இதயம் காப்போம், பாதம் பாதுகாப்போம் போன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக, குறைந்த விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைத்திடவும்; B.Pharm., D.Pharm., முடித்தவர்களைத் தொழில்முனைவோர்களாக வளர்த்தெடுக்கவும் தமிழ்நாடு முழுக்க 1000 முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.