போதையில் தங்கையை அழைத்த நண்பன்.. ஒரேடியாக தீர்த்துக்கட்டிய அண்ணன்.. சென்னையில் பயங்கரம்

 

சென்னையில் தங்கையைப் பாலியல் உறவுக்கு அழைத்து வரச்சொன்னதால் ஆத்திரமடைந்த அண்ணன், நண்பனின் தலையைச் சிதைத்துக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் எழில் நகர் 6வது தெருவில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார். இவர் பிராட்வே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். ரஞ்சித்குமார் மீது ஏற்கனவே இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் தன்னுடன் கூலி வேலை செய்யும் ராயபுரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரை சனி அன்று இரவு வீட்டிற்கு மது குடிக்க அழைத்துள்ளார். இரவு முழுவதும் இருவரும் மது அருந்திய நிலையில், வீட்டின் மொட்டை மாடியில் படுத்து உறங்கி உள்ளனர்.

காலை 5 மணிக்கு சரவணன், ரஞ்சித்குமாரிடம் எனக்கு உனது தங்கையை பிடித்துள்ளது. அவரை அழைத்து வா என கூற, அதிர்ச்சி அடைந்த ரஞ்சித்குமார் சரவணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி அது கைகலப்பாக மாறி உள்ளது.

இதையடுத்து ரஞ்சித்குமார் வீட்டில் வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து சரவணனை தலையில் வெட்டினார். இதில் சரவணன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீசார் சரவணனின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்துவிட்டு வீட்டிலேயே இருந்த ரஞ்சித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.