வைகை அணை 69 அடியை எட்டியது.. 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

 

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை மற்றும் முல்லைப் பெரியாறு அணையில் திறந்து விடப்படும் உபரி நீர் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணை நீர்மட்டம் நேற்று காலை 6 மணிக்கு 66 அடியை எட்டியது.

மதுரை, திண்டுக்கல் முதல் போக பாசனத்திற்கு கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீர் ஜூலை 21-ம் தேதி நிறுத்தப்பட்டது. நேற்று காலை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2,228 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 69 கனஅடி நீர் வெளியேறுகிறது.

இதனையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள எச்சரிக்கை விடப்பட்டது. அணை நீர்மட்டம் 68.50 அடியானதும் 2வது வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியானதும் 3ம் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டு அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.