ரேஷன் கார்டு பயனாளர்களுக்கு சூப்பர் நியூஸ்! இன்று சிறப்பு முகாம்! மிஸ் பண்ணாதீங்க!

 

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ரேஷன் கார்டு என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டையாகும். இதை வைத்து ரேஷன் கடைகளில் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வாங்கலாம். நிதியுதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன.

மாதாந்திர பொது விநியோகத் திட்டத்துக்கான மக்கள் குறை தீர்ப்பு முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று (ஜனவரி 21) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களைப் பதிவு செய்தல் ஆகிய சேவைகளை இந்த முகாம் மூலமாகப் பெறலாம்.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு முதியவர்கள் மணிக் கணக்கில் காத்துக் கிடந்து ரேஷன் பொருட்கள் வாங்குவது சிரமமாக இருக்கும். அதற்காக இந்த அங்கீகாரச் சான்று தமிழ்நாடு அரசு சார்பாக வழங்கப்படுகிறது.