4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

 

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை நடைபெறுகின்றது. 

இந்த போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகள் பங்கேற்பதுடன் 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இத்தகைய போட்டியானது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. 

அதன் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன. எனவே அதற்கான முன்னேற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் வருகிற 28-ம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதற்கிடையில் கடந்த வாரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையட்டி காண தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்துகளை இயக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.