தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!!

 

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து நவம்பர் 4-ம் தேதி வரை வட தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்னாமலை, உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது.   கனமழையின் காரணமாக சாலையின் ஆங்காங்கே நீர் தேங்கியிருப்பதால் நடந்து பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல்
வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் தொடர்மழை காரணமாக மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.