காளை முட்டியதில் மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் மரணம்! பாலமேடு ஜல்லிக்கட்டில் சோகம்

 

பாலமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாட்டுப்பொங்கல் இன்று (ஜன. 16) மஞ்சள் மலை ஆற்று மைதான திடலில் உறுதி மொழி எடுத்து தொடங்கியது. போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

இந்தப் போட்டியில் இதுவரை 14 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துள்ளிக் குதித்து சீறி வரும் காளைகளை காளையர்கள் அடக்கினர். இந்த நிலையில், எதிர்பாாத விதமாக காளை முட்டியதில் மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜ் படுகாயம் அடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவரை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரவிந்த் ராஜ், அதிக காளைகளை அடக்கிய பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தார். 4-ஆம் சுற்று நிறைவில் 16 காளைகளை அடக்கிய மணி முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ராஜா உள்ளார்.